சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வள்ளுவர் சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த அங்குள்ள மேம்பாலத்தை ஜவுளிகடை வரை நீட்டிக்க வேண்டும். அவ்வாறு மேம்பாலத்தை நீட்டித்தால் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அஸ்தம்பட்டி வழியாக செல்லும் பஸ்களை முறைப்படுத்தலாம். இதனால் அருணாசல ஆசாரி தெருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். மேலும் இந்த பாதையை கட்டாய ஒரு வழிபாதையாக ஆக்குவதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.
-ராமசேசன், சேலம்.