கூடுதல் பஸ்கள்

Update: 2024-06-30 17:43 GMT

நாமகிரிப்பேட்டை தாலுகா ஆர்.புதுப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளான புதுப்பட்டி, காட்டூர், வெள்ளக்கல்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் இருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நாமகிரிப்பேட்டையில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களின் படிக்கட்டுகளில் நின்றபடியும், தொங்கியபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். இந்த அவல நிலையை போக்க அந்த வழித்தடத்தில் தினசரி கூடுதல் டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

-சுந்தர், நாமகிரிப்பேட்டை.

மேலும் செய்திகள்