தடுப்புச்சுவர் அமைக்கலாமே!

Update: 2024-06-09 18:07 GMT

தேவூர் அருகே கல்லம்பாளையம் பகுதியில் மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை பொதுமக்கள் கடந்து செல்ல பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த கால்வாய் பாலத்தின் வழியாக பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவிகள் தினமும் எடப்பாடி, குமாரபாளையம், பவானி உள்ளிட்ட நகர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பாலத்தின் ஒருபுறம் தடுப்புச்சுவர் உடைந்து விட்டது, இதனால் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செல்வோர் தவறி கால்வாயில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்..

-சுரேஷ், சேலம்.

மேலும் செய்திகள்