போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படுமா?

Update: 2024-05-12 14:43 GMT


பட்டுக்கோட்டையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலையாரிதெரு,பெரியதெரு,சின்னையாதெரு,பழனியப்பன் தெரு,வடசேரி முக்கம், கைகாட்டி பகுதி ஆகிய இடங்களில் வாகன நெருக்கடியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகின்றனர். ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட சில நேரங்களில் வழி கிடைப்பதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்