சேதமடைந்து கிடக்கும் இருக்கைகள்

Update: 2024-05-05 18:34 GMT

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் சேதமடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. இந்த மருத்துவமனைக்கு தினமும் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி என சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் பஸ்சுக்காக காத்து இருக்கும் நோயாளிகள் உட்கார இடம் இல்லாமல் அவதியடைகின்றன. எனவே நோயாளிகளின் நிலையே கருத்தில் கொண்டு இந்த பஸ் நிறுத்தத்தில் சேதமடைத்து கிடக்கும் இருக்கைகளை சரி செய்து தர அரிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆத்தீஸ்வரன், சேலம்.

மேலும் செய்திகள்