பயணிகள் அவதி

Update: 2024-04-28 15:45 GMT

 பெருந்துறையில் இருந்து ராஜன் நகர், சத்தியாபுரம், குஞ்சரமடை வழியாக கோபிக்கு 12.10 மணிக்கு பி5 என்ற பஸ் புறப்படுகிறது. அதன்பின்னர் 4.20 மணிக்குத்தான் பஸ் இயக்கப்படுகிறது. இடைப்பட்ட 4 மணி நேரம் பஸ் இல்லை. இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே பெருந்துறையில் இருந்து மதியம் 2 மணிக்கு கவுந்தப்பாடி செல்லும் பி 10ஏ என்ற பஸ்சை ராஜன் நகர், சத்தியாபுரம், குஞ்சரமடை வழியாக இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி