கரூர் மாவட்டம், புங்கோடை, குளத்துப்பாளையம், காளிபாளையம், வேட்டமங்கலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலரும் புங்கோடை பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். இந்நிலையில் இந்த வழியாக தார் சாலை போடப்பட்டபோது, மிகவும் உயரமாக போடப்பட்டதால் தார் சாலை ஓரத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் பயணிகள் இந்த நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.