இலவச பஸ் இயக்கப்படுமா?

Update: 2024-03-17 12:19 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் தென்புறநாடு ஊராட்சியை சேர்ந்த பச்சைமலைக்கு உப்பிலியபுரம் வழியாக பூதக்கால், சோளமாத்தி, பெரிய நாகூர், சேத்தகம் ஆகிய மலை கிராமங்களுக்கு தினசரி 10 முறை பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் முதல்-அமைச்சரின் மகளிருக்கான இலவச பஸ் பயண திட்ட பஸ்கள் இதுவரை இப்பகுதியில் இயக்கப்படாதது மலைவாழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து செங்காட்டுப்பட்டியை மையமாக வைத்து உள் சுற்று பஸ்சை இயக்கி மலைவாழ் பெண்கள் பயன்பெற ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி