நாங்குநேரி தாலுகா மருதகுளத்தை அடுத்த மலையன்குளம் கிராமத்தில் உள்ள ஆலயத்துக்கு சனிக்கிழமைதோறும் திரளான பக்தர்கள் வருகின்றனர். எனவே நெல்லை சந்திப்பில் இருந்து காலை 9.30 மணிக்கு மலையன்குளத்துக்கும், மதியம் 2 மணிக்கு மலையன்குளத்தில் இருந்து நெல்லை சந்திப்புக்கும் அரசு சிறப்பு பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.