வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலை சந்திப்பில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு போக்குவரத்து போலீசார் பணியில் இருப்பது இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் காலையில் பள்ளி செல்லும் நேரம் மற்றும் மாலையில் வீடு திரும்பும் நேரம் ஆகிய நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி, நெரிசலை ஒழுங்குபடுத்த உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்