பாளையங்கோட்டை தியாகராஜநகர் ராஜகோபாலபுரத்துக்கு கடந்த சில நாட்களாக அரசு டவுன் பஸ் இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஐகிரவுண்டு ரவுண்டானாவுக்கு சென்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.