நாசரேத் அருகே மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பஸ் நிறுத்த பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அதனை இடித்து அகற்றினர். பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டவில்லை. இதனால் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு புதிய பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.