மதுரை திருமங்கலம் ரெயில் நிலையம் செல்லும் பாதையில் தேவர் சிலை அருகே ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் பூ மார்க்கெட்டால் கடும் வாகன நெரிசல் இருந்து வரும் நிலையில் ஷேர் ஆட்டோக்களும் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?