வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2023-09-20 17:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் அத்திமுகம், சந்தார்செட்டிபள்ளி் சாலை முதல் நரசாபுரம் வழியாக பலவனபள்ளி, ஆலுசாதனபள்ளி, எட்டிபள்ளிகுட்டா வரை செல்லும் சாலையில் தினமும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை சேதமடைந்து உள்ளது. மேலும் மழை காலங்களில் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- தாஜுத்தீன், சூளகிரி.

மேலும் செய்திகள்