முறையாக இயக்கப்படாத அரசு பஸ்

Update: 2023-09-27 11:19 GMT

ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஜம்புகுளம் கிராமத்துக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. அந்தப் பஸ் முறையாக இயக்கப்படுவது இல்லை. ஒருசில நேரத்தில் காலையில் பஸ் இயக்கப்படாது. அன்று மதியம், மாலை இயக்கப்படும். சில நாள் காலை, மதியம் பஸ் இயக்கப்படும். ஆனால் மாலை வராது. சில நாள் காலை மட்டும் வரும். ஆனால் மதியம், மாலை வராது. இதனால் பள்ளி, கல்லூரிக்கும் செல்லும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுகின்றான். வேலைக்கும் செல்வோர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். பஸ்சை நம்பி வாழ்க்கையை நடத்தும் சிலருக்கு குடும்பத்தை இழக்க நேரிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ்சை முறையாக இயக்க வேண்டும்.

-செல்வராஜ், ஜம்புகுளம்.  

மேலும் செய்திகள்

பஸ் வசதி