ராணிப்பேட்டை முத்துக்கடை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்கு, அம்மூரில் இருந்து வரும் கனரக வாகனங்களான லாரிகள், பஸ்கள் சென்னை சாலையில் திரும்ப சிக்கலாக உள்ளது. அங்கு நெடுஞ்சாலையின் நடுவே இருக்கும் தடுப்புச்சுவர் இடையூறாக உள்ளது. கனரக வாகனங்கள் திரும்பும்போது, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. தடுப்புச்சுவரின் நீளத்தை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூரியன்ரவி, ராணிப்பேட்டை.