சேத்துப்பட்டு பகுதியில் இருந்து மடம், தேசூர் வழியாக மகமாய் திருமணிக்கு அரசு டவுன் பஸ் இயக்கினால் வியாபாரிகள், வயது முதிர்ந்தவர்கள், மாணவ-மாணவிகள் பயன் அடைவார்கள். பொதுமக்களின் கோரிக்கையை அரசு போக்குவரத்துக்கழகம் சேத்துப்பட்டு பணிமனை நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும்.
-பொதுமக்கள், சேத்துப்பட்டு.