பஸ் நிலையத்தில் குப்பைகள் வீசப்படும் அவலம்

Update: 2023-05-17 17:03 GMT

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் காரணமாக, நகர் முழுவதும் குப்பைத்தொட்டி இல்லா நகரமாக அறிவிக்கப்பட்டு, குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டன. இதனால் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகளை கொடுக்க இயலாத மக்கள், தெருக்களில் கொட்டி வருகின்றனர். இதே நிலை தற்போது புதிய பஸ்நிலையத்தில் ஏற்பட்டுள்ளது. பஸ் நிலைய வளாகத்தில் குப்பைத் தொட்டிகள் இல்லாததால் கண்ட இடங்களில் குப்பைகளை பயணிகள் வீசுகின்றனர். அவ்வப்போது ஊழியர்கள் குப்பைகளை அகற்றினாலும், மீண்டும் மீண்டும் குப்பைகள் வீசப்படுகிறது. பஸ் நிலையத்தில் ஆங்காங்கே குப்பைத்தொட்டிகளை வைத்து, வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்.

-ஜோசப்ஸ்டாலின், இமானுவேல்நகர், வேலூர். 

மேலும் செய்திகள்