பஸ் டிக்கெட் முன்பதிைவ முறைப்படுத்துவார்களா?

Update: 2024-11-10 20:19 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மூலமாக விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் ஆரணி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து சென்னை வரை செல்வதற்கு ஆன்லைன் புக்கிங் பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆரணியில் இருந்து சென்னை வரை செல்வதற்கு ரூ.135 கட்டணம் ஆகிறது. ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்யும் கட்டணம் ரூ.164 வசூலிக்கப்படுகிறது. அதற்காக காலை 10.30 மணி, 11 மணி, 12.15 மணி, 1 மணி, 10 மணி என 4 நேரங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிற டிக்கெட்களுக்கு சம்பந்தப்பட்ட இருக்கைகளை ஒதுக்கி தராமல் பயணிகள் எப்போதும் போல ஏறும் வகையே நடைமுறையாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பிரகாஷ், ஆரணி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி
பஸ் வசதி