ராணிப்பேட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகம் ஆகிய 2-ம் ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள மகாவீர் நகரில், புதிதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. பொதுமக்கள் எளிதில் சென்று வர முடியாத இடத்தில் 2 அலுவலகங்கள் உள்ளன. புதிதாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டதால், இந்த இடத்தில் தற்காலிகமாக பதிவாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேறு இடம் மாற்றும் வரை, பதிவாளர் அலுவலகங்கள் உள்ள இடத்துக்கு செல்ல, அந்த வழியாக செல்லும் அனைத்துப் பஸ்களும் பதிவாளர் அலுவலகம் உள்ள இடத்தில் நின்று செல்ல, மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துத் துறையும் ஆவணம் செய்ய வேண்டும்.
ராஜா பாதர், ராணிப்பேட்டை