தனியார் டவுன் பஸ்கள் வள்ளிமலை கூட்ரோடு வரை வருமா?

Update: 2022-10-16 11:41 GMT

காட்பாடி போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாகும். பாகாயம்-காட்பாடி டவுன் பஸ்கள் முன்பெல்லாம் கல்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சென்று திரும்பி செல்லும். அந்தப் பகுதியில் கண்டக்டர்கள் கையெழுத்துப் போடும் பதிவேடு வைக்கப்பட்டு, கண்காணிக்கும் நிலை இருந்தது. அண்மைக் காலமாக தனியார் டவுன் பஸ்கள் காலை, மாலை நேரத்தில் காட்பாடி வள்ளிமலை கூட்ரோடு வரை வந்து திரும்பாமல் ரெயில் நிலைய பகுதியிலேயே திரும்பி விடுகின்றன. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்துத்துறை, காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?

-பி.துரை, கல்புதூர். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி
பஸ் வசதி