நேரடி பஸ் வசதி தேவை

Update: 2024-06-30 19:55 GMT

சோளிங்கர் அருகே பரவத்தூர் கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தைச் சுற்றிலும் 25-க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளன. அந்தக் கிராம மக்கள் வேலூர் சென்று வர அரக்கோணம் அல்லது சோளிங்கர் சென்று அங்கிருந்து வேலூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பரவத்தூரில் இருந்து நேரடியாக வேலூர் செல்ல பஸ் வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பெ.சு.மணி, சமூக ஆர்வலர், பரவத்தூர்.

மேலும் செய்திகள்