ஆற்காடு நகரில் அண்ணா சாலை, பஜார் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. பஜார் சாலை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்த நிலையிலும் ஆரணியில் இருந்து ராணிப்பேட்டையை நோக்கி வரும் கார் மற்றும் பிற வாகனங்கள் ஒரு வழி பாதையில் வருவதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுக்க போக்குவரத்துப் பிரிவு போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா
-சரவணன், ஆற்காடு.