கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் இருந்து கல்வி நிறுவனங்களுக்கு சிறுவர், சிறுமிகளை ஏற்றி செல்லவும், மாலை வீட்டுக்கு அழைத்து வந்து விடவும் பள்ளி வாகனங்கள் ஊருக்குள் வருகின்றன. அவ்வாறு புதிய சாலை பகுதியில் இருந்து பெருமாள் கோவில் தெருவில் குறுகிய பாதையில் வரும் பள்ளி பஸ்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பள்ளி பஸ்கள் வரும்போது எதிரே வரும் வாகனங்களால் ஒதுங்கி செல்லும்போது கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. சேதம் அடைந்த கால்வாய்களை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-சத்தியன், கண்ணமங்கலம்.