பஸ் நிலையத்துக்குள் வராத பஸ்கள்

Update: 2024-12-22 20:49 GMT

வாலாஜாவில் பல கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், பல தனியார், அரசு பஸ்கள் புதிய பஸ் நிலையம் உள்ளே வராமல் காந்தி சிலை அருகிலேேய நின்று செல்கின்றன. இதனால் அப்பகுதியில் தினமும் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை அதிகமான மக்கள் நடமாட்டமும், போக்குவரத்து நெரிசலும் உள்ளது. அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-சம்பத்குமார், வாலாஜா. 

மேலும் செய்திகள்