வேளாண்மை அலுவலகம் முன்பு பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2022-09-19 09:49 GMT

வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் இருந்து கண்ணமங்கலம் செல்லும் சாலையில் கணவாய் பகுதியில் கடம்பவனவாசவி அம்மன் கோவில் அருகே கணியம்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளை காணவும், திட்டங்களை பெறவும் தினமும் ஏராளமான விவசாயிகள் வந்து செல்கின்றனர். குடியிருப்புகள் இல்லாத பகுதியில் வேளாண்மை அலுவலகம் அமைந்துள்ளதால், பஸ்கள் நின்று செல்வதில்லை. எப்போதும் பஸ்கள் செல்லும் பிரதான சாலையாக ஆரணி சாலை உள்ளது. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை பஸ்கள் வந்து செல்கின்றன. இருப்பினும் இந்த இடத்தில் பஸ் நிறுத்தம் இல்லை எனக்கூறி, பஸ் டிரைவர்கள் நிறுத்துவதில்லை. இதனால் அலுவலகத்திற்கு செல்பவர்கள் இருசக்கர வாகனத்திலே வந்து செல்லும் சூழ்நிலை உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் கணியம்பாடியில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவு நடந்தே செல்ல வேண்டிய அவல நிலையும் காணப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அனைத்துப் பஸ்களும், கணியம்பாடி கணவாய் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை அலுவலகத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தனவேல், கணியம்பாடி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி