காட்பாடி-பாகாயம் செல்லும் 1, 2-ம் நம்பர் அரசு மற்றும் தனியார் பஸ்களில் சில மண்டபம், டான்போஸ்கோ பள்ளிக்கூடம், ரவுண்டானா ஆகிய பஸ் நிறுத்தம் வழியாக காந்திநகருக்குள் வருவது இல்லை. நேராக சென்று விடுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் ஓடைபிள்ளையார் கோவில், சில்க்மில் பஸ் நிறுத்தத்தில் இறங்கி காந்திநகருக்குள் உள்ளே நடந்து செல்ல ேவண்டி உள்ளது. எனவே அனைத்துப் பஸ்களும் மேற்கண்ட நிறுத்தங்கள் வழியாக காந்திநகருக்குள் வந்து செல்ல வேண்டும்.
-பொதுமக்கள், காந்திநகர் காட்பாடி.