பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2026-10-04 18:06 GMT

வேலூரை அடுத்த கணியம்பாடி-கண்ணமங்கலம் சாலையில் கணவாய் பகுதியில் கடம்ப வனவாசவி அம்மன் கோவில் அருகே கணியம்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்துக்கு தினமும் பலர் வருகின்றனர். அங்கு, பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் அலுவலகத்துக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனத்திலேயே வந்து செல்லும் நிலை உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் கணியம்பாடியில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி கணியம்பாடி கணவாய் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை அலுவலக பகுதியில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராகுல், கணியம்பாடி. 

மேலும் செய்திகள்

பஸ் வசதி