திமிரி பேரூராட்சியில் பஸ் நிலையத்துக்கும், வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளது. ஆரணியில் இருந்து சென்னை செல்லும் தடம் எண்:202, சென்னையில் இருந்து ஆரணி செல்லும் தடம் எண்:202 மற்றும் போளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் செல்லும் பஸ்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் நின்று செல்ல வேண்டும். இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளனர். ஆனால், உத்தரவை பஸ் டிரைவர்கள் மதிப்பதில்லை. எனவே வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரமூர்த்தி, திமிரி.