போளூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் திருவண்ணாமலை அரசு கல்லூரிகளில் படித்து வருகின்றனர். மாணவ-மாணவிகளின் வசதிக்காக போளூரில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒரே ஒரு டவுன் பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. அந்தப் பஸ்சில் மாணவ-மாணவிகளும், பயணிகளும் ஏறுகிறார்கள். இதனால் மாணவ-மாணவிகள் படியில் தொங்கி ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். டவுன் பஸ்சில் கூட்டம் நிறைந்ததுபோக மீதி உள்ள மாணவ-மாணவிகளை மற்றொரு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கின்றனர். போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரத், போளூர்.