அரக்கோணம் தாலுகா மோசூர் ரெயில் நிலையத்தில் மாலை நேரத்தில் மதுபிரியர்கள் பயணிகளுக்கு இடையூறு செய்து வருகிறார்கள். காலி மதுபான பாட்டில்களை ரெயில் நிலையத்தில் வீசிவிட்டு செல்கிறார்கள். ரெயில் நிலையத்தில் உள்ள மின்சார விளக்குகள், ஒயர்களை சேதப்படுத்துவதுடன் பயணிகளுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். எனவே ரெயில்வே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
-ராஜா, மோசூர்.