கடமலைக்குண்டு அருகே குமணன்தொழுவில் உள்ள சின்னசுருளி என்று அழைக்கப்படும் மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால் போதிய அரசு பஸ்கள் இல்லாததால் அவர்கள் ஆட்டோ, கார்களில் அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மேகமலை அருவி பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.