திருவள்ளூர் மாவட்டம் ஜி.என்.டி சாலை எப்போதும் விறுவிறுப்புடன் காணப்படும். இந்தசாலையின் இரு புறங்களிலும் வாகன ஓட்டிகளுக்கு இடையூராக வாகனங்களை அணிவகுத்து நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இந்த சாலை காலை-மாலை நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகிறது. பணிக்கு செல்பவர்கள் சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலையும் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.