கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2023-02-19 17:26 GMT

திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளிக்கு புதுப்பேட்டை மற்றும் தாமலேரிமுத்தூர் வழியாக பஸ்கள் சென்று வருகின்றன. ஆனால் புதுப்பேட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆனால் திருப்பத்தூரில் நாட்டறம்பள்ளிக்கு புதுப்பேட்டை வழியாக ஒருசில பஸ்கள் சில நேரங்களில் மட்டுமே சென்று வருகின்றன. மற்ற நேரங்களில் அப்பகுதி மக்கள் ஷேர் ஆட்டோவை தான் நம்பி பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஷேர் ஆட்டோவில் கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.30 வசூல் செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே புதுப்பேட்டை வழியாக கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும்.

-கோகுல்நாத், அச்சமங்கலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி