வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பலர் ஆம்பூருக்கு செல்கிறார்கள். ஆம்பூருக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒரு மணி நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. ஒரு பஸ், பஸ் நிலையத்துக்குள் நுழைந்ததும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விடுகின்றன. பல பயணிகள் நின்று கொண்டே ஆம்பூருக்கு பயணிக்க வேண்டி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், அரசு போக்குவரத்துக்கழகமும் பேரணாம்பட்டு-ஆம்பூருக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.