திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பகுதியில் சுற்றுலாத்தலமான ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலை உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலைகளை கடக்கும்போது அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடமாக அப்பகுதி மாறிவிட்டது. எனவே அப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்.
-செந்தில், திருப்பத்தூர்.