வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும்

Update: 2025-05-18 20:14 GMT

திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம்-ஆலங்காயம் நெடுஞ்சாலையில் பொம்மிகுப்பம் ஏழருவி செல்லும் கிராமத்துக்கு தகவல் பலகை வைக்கப்படாமல் இருக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துக்கு ஆளாகின்றனர். 4 புறமும் செல்லும் சாலையாக இருப்பதால் வேகமாக வருகின்ற வாகன ஓட்டிகள் திரும்புவதற்கு தெரியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே பொம்மிகுப்பம் ஏழருவி செல்லும் சாலை என்பதை உணர்த்தும் வகையில் ஒரு தகவல் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராதாகிருஷ்ணன், பொம்மிகுப்பம்.

மேலும் செய்திகள்