பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும்

Update: 2022-07-18 12:20 GMT


ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையின் மறுபக்கம் வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர் மற்றும் சித்தூர் செல்லும் பயணிகள் பலர் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். அங்கு பயணிகள் நிழற்குடை இல்லை. மழை, வெயிலில் ஒதுங்கக்கூட இடமில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தற்காலிக பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும்.

-ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்