வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த சோழவரம் தெற்கு கொட்டாமேடு பகுதியில் உள்ள பஸ் பயணிகள் நிழற்கூடத்தில் பயணிகளுக்கு இடையூறாக மாடுகளுக்கு வைக்கோல் வைக்கப்பட்டுள்ளது. மாடுகள் கட்டும் தொழுவமாகவும் மாறி விட்டது. பயணிகள் நிழற்கூடம் அசுத்தமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-த.அரவிந்தன், சோழவரம்.