சென்னை வியாசர்பாடியில் உள்ள மூர்த்திங்க ஐயர் தெரு பல ஆண்டுகளாக இருவழிப்பாதையாக செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த வாரம் முதல் இருவழிப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஏற்கனவே வியாசர்பாடி மேம்பாலத்தில் இருந்து மூலக்கடை நோக்கி செல்லும் வாகனங்கள் முத்து முதலி தெரு அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில் மூர்த்திங்க ஐயர் தெரு வழியாக கணேசபுரம் மேம்பாலத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் முத்து முதலி தெரு வழியாக திருப்பி விடப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது. எனவே போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.