தஞ்சையை அடுத்த கடகடப்பை பகுதியில் ரெயில்வே கீழ்பாலன் உள்ளது. இந்த கீழ்பாலத்தில் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பயணம் செய்து வருகின்றனர். மழைக்காலங்களில் கீழ்பாலத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் இடுப்பளவு தண்ணீரில் இறக்கி நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் தேங்கி கிடக்கும் மழைநீரில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ-மாணவிகள், வாகனஓட்டிகள் நலன் கருதி ரெயில்வே கீழ்பாலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?