தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்ப்பல்கலைக்கழக பஸ் நிறுத்தம் உள்ளது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தஞ்சை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் அருகே போலீஸ் நிலையமும் அமைந்துள்ளது. இந்தநிலையில் தஞ்சையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தமிழ்ப்பல்கலைக்கழக பஸ்நிறுத்தத்தில் நின்று செல்வது இல்லை. மாறாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் பஸ்நிறுத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றன. இதனால் பல்கலைக்கழகத்திற்கு வருவோர் அங்கிருந்து நீண்ட தூரம் நடந்து சென்று பஸ் ஏறி இறங்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பஸ்நிறுத்ததில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளர்.