மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலை வழியாக காரைக்கால், பொறையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சாலையில் ஏராளமான கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ-மாணவிகள் இந்த வழியாக செல்லும் பஸ்சை தான் நம்பி உள்ளனர். ஆனால் இந்த வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.