பெயர் பலகையை மறைத்துள்ள மரக்கிளைகள்

Update: 2022-11-16 11:16 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மங்கை நல்லூரில் இருந்து ஆடுதுறை, கும்பகோணம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் வாகனஓட்டிகளின் வசதிக்காக வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பலகையை மரக்கிளைகள் மறைத்துள்ளது. பெயர் பலகையில் உள்ள ஊர் பெயர் தெரியாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர்பலகையை மறைத்துள்ள மரக்கிளைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி