பேருந்து தடம் எண்: 2 அண்ணா சதுக்கத்திலிருந்து கவியரசு கண்ணதாசன் நகர் வரை செல்கிறது இதனை முன்புறம் பின் புறம் கண்ணாடியில் மற்றும் பக்கவாட்டில் அதன் செல்லும் வழி தடங்களை சென்ட்ரல், சூளை, புளியந்தோப்பு ,கணேசபுரம், வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் என எழுதினால் முதியோர்களுக்கும் பெண்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் அவர்கள் தடம் எண்ணை படிப்பதற்குள்ளாகவே பேருந்து கிளம்பி விடுகிறது ,எனவே ஏற்கனவே இயங்கும் ஒரு பேருந்துக்கு பதிலாக மூன்று பேருந்து இயங்க நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... மற்றும் அதன் வழிதடத்திற்காக காத்திருந்து அதில் பயணம் செய்ய உதவியாக இருக்கும்.