படிகளில் ஆபத்தான பயணம்

Update: 2022-09-14 15:32 GMT

திருவாரூர் பழைய மற்றும் புதிய பஸ்நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இங்கிருந்து தினமும் ஏராளமானோர் பல்வேறு பணிகளுக்காக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதேபோல் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு சென்று வரும் மாணவ-மாணவிகளும் தினமும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பஸ்களில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் சிலர் பஸ்களில் படிகட்டுகளில் தொங்கிய நிலையில் ஆபத்தான பயணம் செய்கின்றனர். பஸ்களில் கூட்டம் அதிகளவில் காணப்படுவதால் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கூட்டத்தை தவிர்க்க கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி