பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், தெரணி கிராம மாணவர்கள் தினமும் காரை கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு பயில்வதற்காக சென்று வருகின்றனர். மேலும் தெரணி கிராம பொதுமக்களும் தினமும் காரை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ தேவைக்காகவும், ஆலத்தூர் தாலுகா அலுவலகத்திற்கும் சென்று வருகின்றனர். அனைவரும் காலை 9 மணிக்கு வரும் அரசு பஸ்சை பயன்படுத்துகின்றனர். அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே அரசு பஸ்சை பயன்படுத்தி வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்சின் படியில் நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் உரிய நேரத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரி செல்ல முடியவில்லை. எனவே காலை மற்றும் மாலை வேளையில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.