கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் டானிங்டன் முதல் கருமாரியம்மன் கோவில் வரை நடைபாதையில் ஏராளமான பழைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அந்த பாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்களை அகற்றுவதோடு, உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.