சென்னை திருவான்மியூரில் இருந்து பிராட்வே வரை செல்லும் 21டி மாநகர பஸ் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பஸ் இந்திரா நகர், பெசன்ட்நகர், சேப்பாக்கம் வழியாக இயங்கிவந்தது. இந்த பஸ் மீண்டும் இயக்கப்பட்டால் பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். பயணிகளின் கோரிக்கை கவனிக்கப்படுமா?