கிருஷ்ணகிரி மாவட்டம் பத்தலப்பள்ளியில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினமும் மார்க்கெட்டுக்கு ஆயிரக்கணகான வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த வாகனங்கள் ஒரே நேரத்தில் குவிவதால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகள், மருத்துவமனை மற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்லும் நபர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ், கிருஷ்ணகிரி.